வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் இழந்தது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி 15 பேர் அடங்கிய இந்த தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுக வீரரான மேத்யூ பிரிட்ஸ்கீக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர சேனுரான் முத்துசாமிக்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இதற்கிடையில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த டெம்பா பவுமா, மூன்றாவது போட்டியில் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக முதல் போட்டியில் ஐடன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வரியம் இன்று அறிவித்துள்ளது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான இந்த அணியில் அனுபவ ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனுக்கு இடம் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு இந்த அணியில் ஸகர் அலி அனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த தொடர் முதல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பில் சிம்மன்ஸ் செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே வங்கதேச அணி இந்தியாவுக்கு எதிரன டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், சொந்த மண்ணில் அந்த அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்ஃபிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், ஜாகர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் , தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம் (முதல் டெஸ்ட் கேப்டன்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News