வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

Updated: Thu, Oct 16 2025 20:57 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், டி20 தொடரானது அக்டோபர் 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடர்கிறார். மேகும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் அகஸ்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், எவின் லூயிஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியில் இரண்டு வடிவங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியின் கேப்டனாக மஹெதி ஹசன் மிராஸ் தொடர்கிறார். அதேசமயம் லிட்டன் தாஸ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்தும் விலக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன் உள்ளிட்டோர் மோசமான ஃபார்மில் இருக்கும் நிலையிலும், அவர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வங்கதேச அணி: மெஹிதி ஹாசன் மிராஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், சைஃப் ஹாசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், மஹிதுல் இஸ்லாம், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் ஹசன், ஹசன் மஹ்மூத்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, காரி பியர், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்

Also Read: LIVE Cricket Score

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அமீர் ஜாங்கு, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ரமோன் சிம்மண்ட்ஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை