வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தாக்காவில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதில் வங்கதேச அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறும் பட்சத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டி20 தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - வங்கதேசம் - ஆஸ்திரேலியா
  • இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நேரம் - மாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதிலும் வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு உதவியுள்ளனர். 

Advertisement

அதிலும் ஷகிப் அல் ஹசன், முகம்து நைம், அஃபிஃப் ஹசன், நுருல் ஹசன் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், நாளைய போட்டியிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதேசமயம் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அந்த அணியின் மிட்செல் மார்ஷை தவிர மற்ற அனைவரும் சோபிக்க தவறிவருவதால், அந்த அணி முதல் முறையாக வங்கதேசத்திடம் தொடரை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாளைய போட்டி ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 6
  • ஆஸ்திரேலியா வெற்றி - 4
  • வங்கதேச வெற்றி - 2

உத்தேச அணி

பங்களாதேஷ் - சௌமியா சர்கார், முகமது நைம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது.

Advertisement

ஆஸ்திரேலியா - ஜோஷ் பிலிப்பே, அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், மோயிஸ் ஹென்ரிக்ஸ், ஆஷ்டன் டர்னர்/ டேனியல் கிறிஸ்டியன், மேத்யூ வேட் (கே), ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ வேட்
  • பேட்ஸ்மேன்கள் - நைம் ஷேக், மஹ்முதுல்லா, மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், மஹேதி ஹசன், மிட்செல் மார்ஷ்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தாபிசூர் ரஹ்மான், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஷோரிஃபுல் இஸ்லாம்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News