BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜக்கார் அலி விலகல்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

Updated: Mon, Oct 28 2024 21:10 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நாளைய தினம் இப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், வங்கதேச அணி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. அந்தவகையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜக்கார் அலி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வங்கதேச அணி மருத்துவர் கூறுகையில், “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜக்கார் அலி பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், தலை பகுதியில் பந்து தாக்கி காயமடைந்தார். மேலும் இதற்கு முன்னரும் அவருக்கு தலை பகுதியில் பந்து தாக்கிய நிலையில், தற்சமயம் மீண்டும் அவருக்கு தலை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய சிறிது காலம் தேவைப்படும். 

இதனால் மருத்துவர்களின் அறிவுரை படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காயம் காரணமாக ஜக்கார் அலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக அறிமுக வீரர் மஹிதுல் இஸ்லாம் அன்கோன் வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வங்கதேச அணி: நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், மெஹெதி ஹசன் மிராஜ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, ஹசன் முரத், கலீத் அஹ்மத், மஹிதுல் இஸ்லாம்.

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை