வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷஃபாலி வர்மாவும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் தான் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், யஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இறுதியில் அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்திரேகர், மின்னு மணி ஒருசில பவுண்டரிகளை விளாசினர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சுல்தானா 3 விக்கெட்டுகளையும், ஃபஹிமா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News