அயர்லாந்து மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடிவந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைப்பெற்றது. 

Advertisement

சில்ஹெட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய் அந்த் அணிக்கு சோபனா மோஸ்ட்ரி - முர்ஷிதா கதும் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முர்ஷிதா கதும் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷார்மின் அக்தர் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோபனா மோஸ்ட்ரி 45 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 34 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷார்மின் அக்தரும் தனது விக்கெட்டை இழந்தார். இதனியடுத்து களமிறங்கிய வீராங்கனகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து மகளிர் அணிக்கு ஏமி ஹண்டர் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஏமி ஹண்டர் 28 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து 21 ரன்களைச் சேர்த்த கையோடு கேபி லூயிஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 11 ரன்னிலும், லிய பால் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய லாரா டெலானி ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுப்பக்கம் விளையாடிய ரெபெக்கா ஸ்டாகெல் 19 ரன்னிலும், அர்லீன் கெல்லி 02 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லாரா டெலானி 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து மகளிர் அணி இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன், வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News