பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!

Updated: Tue, Mar 04 2025 20:10 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இளம் வீரர்கள் ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், அப்துல் சமாத், இர்ஃபான் நியாசி ஆகியோருடன் அனுபவ வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன் அஃபிர்டி, அப்ரார் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவூஃப் ஆகியோரும் டி20 அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி, அப்ரார் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழுவை அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடிமையாக விமர்சித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் இந்தியாவுக்கு எதிராக 64 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடிய சவுத் ஷகீல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஆட்டத்தில் கூட இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் ஆகியோர் நீக்கப்பட்டதற்கு அவர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கு எதிராக சவுத் ஷகீல் எத்தனை ரன்கள் எடுத்தார்? 64? ஆனாலும், அவர் அணியில் இல்லை. உங்கள் அடுத்த பெரிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஹஸ்னைன் ஏன் அணியில் இல்லை? அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார், ஆனால் இரண்டு வடிவங்களிலும் அவர் புறக்கணிக்கப்படுகிறார். ஒரு இளம், திறமையான வீரருக்கு இது என்ன வகையான அநீதி?

சில வீரர்கள் தங்களுக்கென நல்ல பிம்பங்களை உருவாக்கியுள்ளனர், அதனால்தான் அவர்கள் அணியில் உள்ளனர். இந்தப் பதிவுகள் அனைத்தும் பின் கதவு வழியாக வந்தவர்களுக்கு” என்ற் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியது போல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் சில வீரர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ரசிகர்களும் குற்றச்சாட்டை முவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை