பிபிஎல் 2021: வேட், ஷார்ட் அதிரடியில் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Dec 11 2021 16:41 IST
BBL 11: Hobert Hurricans beat Sydney Sixers by 44 runs (Image Source: Google)

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் - டி ஆர்சி ஷார்ட் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ வேட் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஷார்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ரன்களைக் குவித்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து மழைப் பெய்த காரணத்தால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு சிக்சர்ஸ் அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்படி விளையாடிய சிக்சர்ஸ் அணிக்கு ஜோஷ் பிலீப்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அரைசதம் கடந்த அவர் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சரிவர விளையாடாமல் தடுமாறினார். 

இதனால் 18 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் அணியால் 151 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 42ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை