பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெர்த் அணிக்கு தொடக்க வீரர் காலின் முன்ரோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தர் காலின் முன்ரோ 114 ரன்களைக் குவித்திருந்தார். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் தொடக்க வீரர் மேத்யூ ஷார்டை தவிர மற்ற யாரும் சொபிக்கத் தவறினர். 

இதனால் 17.5 ஓவர்களிலேயே ஸ்டிரைக்கர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. பெர்த் அணி தரப்பில் பெஹ்ன்ரெஃப், ஆண்ட்ரூ டை தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன் மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News