ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிபிஎல் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியில் மார்ட்டின் கப்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து வந்த சாம் ஹார்பர் 22 ரன்னிலும், நட்சத்திர வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 10 ரன்களிலும், மேத்யூ 23 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இருப்பனும் மற்றொரு தொடக்க வீரரான ஷான் மார்ஷ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய மார்ஷ் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதற்கிடையில் சதர்லேண்ட் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் அடுத்து களமிறங்கிய வெல்ஸ் 12 ரன்களைச் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷான் மார்ஷ் 54 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 82 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா - ஜோஷ் பிரௌன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 75 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

இதில் ஜோஷ் பிரௌன் 39 ரன்களும், அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா 59 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னேவும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய மேட் ரென்ஷா  13 பந்தில் 27 ரன்கள் விளாசி போட்டியை முடித்து கொடுத்தார். 

Advertisement

இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 19ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி, சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்கிறது. அதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை எதிர்கொள்ளும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News