பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, Jan 01 2023 12:39 IST
BBL 12: Yet another match-winning knock from Josh Inglis! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பேர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியில் கேப்டன் மேடின்சன் ரன் ஏதுமின்றியும், மார்ட்டின் கப்தில் 6 ரன்களிலும், ஹேன்ஸ்கோம்ப் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஃபிஞ்ச் அரைசதம் கடந்தார். அதன்பின் 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தனர்.

இதையடுத்து இலக்கை துரத்திய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் ஆடம் லித் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - கேமரூன் பான்கிராஃப்ட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் டூ பிளெசிஸ் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பான்கிராஃப்ட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்லிஸும் அதிரடியாக விளையாடி 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆஷ்டன் டர்னரும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை