பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாம் ஹார்ப்பர் 5 ரன்களிலும், தாமஸ் ரோஜர்ஸ் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி செர்ந்த வெப்ஸ்டர் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மேக்ஸ்வெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ரன்களுக்கு, கார்ட்ரைட் 22 ரன்களிலும், மெர்லோ 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த வெப்ஸ்டரும் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிட்னி தண்டர் அணி தரப்பில் டேனியல் சம்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸமான் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு கேமரூன் பான்கிராஃப்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பான்கிராஃப்ட் 30 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 40 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் களமிறங்கிய ஜேசன் சங்கா 19 ரன்களுக்கும், ஓலிவிய டேவிஸ் 23 ரன்களுக்கும், அலெக்ஸ் ரோஸ் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேனியல் சாம்ஸ் 22 ரன்களையும், நாதன் மெக்கண்ட்ரூ 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸமான் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.