ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மொல்போர்ன் ஸ்டிரைக்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் நிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் வெதார்லெட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 11 ரன்களுக்கும், ஜேக் வெதர்லெட் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 8 ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி ஆர்சி ஷார்ட் மற்றும் அலெக்ஸ் ரோஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி  ஆர்சி ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேஸ்லியும் 16 ரனனிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ரோஸூம் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஆடம் மில்னே, பீட்டர் சிடில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இணைந்த சாம் ஹார்பர் - கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஸ்டொய்னிஸ் 27 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 15 ரன்னிலும், தாமஸ் ரோஜர்ஸ் 2 ரன்னிலும், ஹாமில்டன் கார்ட்ரைட் 4 ரன்னிலும், பியூ வெப்ஸ்டர் 3 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சாம் ஹார்பர் 48 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய டாம் கரணும் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News