பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஆணிக்கு மிட்செல் ஓவன் - கலெப் ஜுவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஓவன் 8 ரன்னிலும், ஜுவெல் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷய் ஹோப் மற்றும் பென் மெக்டொர்மோட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் மெக்டர்மோட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் நிகில் சௌத்ரீ 20 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் மெக்டர்மோட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களையும், கிறிஸ் ஜோர்டன் 17 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. அடிலெய்ட் அணி தரப்பில் ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் டி ஆர்சி ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். 

இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 76 ரன்களை கடந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி ஆர்சி ஷார்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின்னும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய மேத்யூ ஷார்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களைய்ம் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப் 39 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஜேமி ஓவர்டன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News