பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு டாம் பாண்டன் மற்றும் கேப்டன் காலின் முன்ரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் முன்ரோ ஒரு ரன்னில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் பான்டனும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி மற்றும் மேத்யூச் ரென்ஷா இணை தலா 9 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பின் களமிறங்கிய மேக்ஸ் பிரைண்ட் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.

Advertisement

தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் பிரைண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் விளையாடி வந்த பால் வால்டர் 21 ரன்களிலும், வில் பிரிஸ்ட்விட்ஜ் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் பிரைண்ட் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் மார்க் ஸ்டெகெடீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு இப்போட்டியில் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து தாமஸ் ரோஜர்ஸ் 6 ரன்களிலும், சாம் ஹார்பர் 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 14 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் மற்றும் கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 62 ரன்களை எடுத்த நிலையில் ஸ்டொய்னிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் லாரன்ஸ் 64 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News