பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 14ஆவது சீசன் நேற்று கோலாகலமாக  தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - ஜோஷ் பிரௌன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில் மெக்குர்க் 21 ரன்னிலும், ஜோஷ் பிரௌன் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய மெக்கன்சி ஹார்வி 11 ரன்னிலும், லௌரி எவான்ஸ் ஒரு ரன்னிலும், ஹசன் கான் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் டிம் செய்ஃபெர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

அதேசமயம் டிம் செஃபெர்ட்டுடன் இணைந்த கேப்டன் சதர்லேண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் செஃபெர்ட் 55 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சதர்லேண்ட் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ, சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி அணிக்கு ஜோஷ் பிலீப் - ஜேம்ஸ் வின்ஸ் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிலீப் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வின்ஸுடன் இணைந்த ஜேக் எட்வர்ட்ஸும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேம்ஸ் வின்ஸ் 40 ரன்னிலும், ஜேக் எட்வர்ட்ஸ் 37 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்ட்ன் ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

ஆனால் மறுமுனையில் விளையாடிய ஜோர்டன் சில் 2 ரன்னிலும், ஜோயல் டேவிஸ் 10 ரன்னிலும், ஹெய்டன் கெர் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் தனது அதிரடியை கைவிடாத ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிட்னி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News