பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து டி ஆர்சி ஷார்ட் 10 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஒல்லி போப் - அலெக்ஸ் ரோஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும பறக்கவிட்டு அணியை சரிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் ஒல்லி போப் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். 

Advertisement

அதன்பின் 57 ரன்களைச் சேர்த்த நிலையில் ஒல்லி போப் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை  நெருங்கிய அலெக்ஸ் ரோஸும் 48 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. சிட்னி சிக்ஸர்ஸ் அணி தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ் மற்றும் டாட் மர்ஃபி மற்றும் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஜோஷ் பிலீப் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேக் எட்வர்ஸ் 8 ரன்களுக்கும், கேப்டன் ஹென்றிக்ஸ் 15 ரன்களுக்கும், ஜோர்டன் சில்க் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து நிலையில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த லாச்லன் ஷா 32 ரன்களையும், பென் துவார்ஷுயிஸ் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹெய்டன் கெர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News