பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தண்டர் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் சாம் கொன்ஸ்டாஸ் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் மேத்யூ கில்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் தலா 8 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஜார்ஜ் கார்டன் ஒரு ரன்னிலும், ஹுக் வெய்ப்ஜன் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணி 75 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் கொன்ஸ்டாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் கொன்ஸ்டாஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய டாம் ஆண்ட்ரூஸ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி தரப்பில் லான்ஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பெர்த் அணி வீரர்கள் தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் சான் ஃபென்னிங் ஒரு ரன்னிலும், ஃபின் ஆலன் 9 ரன்களிலும், கூப்பர் கன்னொலி 7 ரன்னிலும், கேப்டன் ஆஷ்டன் டர்னர் 4 ரன்னிலும், ஆரோன் ஹார்டி 22 ரன்னிலும், நிக் ஹாப்சன் 10 ரன்னிலும், மேத்யூ 13 ரன்னிலும் விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் 17 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

இதனால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தண்டர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கிறிஸ் கிரீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சிட்னி தண்டர் 61 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய டாம் ஆண்ட்ரூஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News