ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டி மின்னல் காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஹக் வெய்ப்ஜென் 11 ரன்களிலும் என விக்கெட்ட இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூ கில்க்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் மேத்யூ கில்க்ஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்ஸ் 24 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஒலிவியர் டேவிஸ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறவே, நிதானமாக விளையாடி வந்த ஒலிவியர் டேவிஸும் 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் டாம் கரண் மற்றும் உசாமா மிர் ஆகியோர் தால 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஸ்டார்ஸ் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையாமல், வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சாம் ஹார்பர் 6 ரன்னிலும், தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ச்கோம்ப் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதில் ஸ்டொய்னிஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹில்டன் கார்ட்ரைட் 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல்லும் 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் மார்க் ஸ்டெக்கிடி 18 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தண்டர் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன் மெக்ஆண்ட்ரூ 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.   

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News