பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடிபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மெல்பொர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கான்பெர்ராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதனையடுத்து முதலில் விளையாடிய தண்டர் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் - கேமரூன் பான்கிராஃப்ட் இணை அதிரடியாக தொடங்கியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் விளையாடி வந்த கேமரூன் பான்கிராஃப்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஒலிவியர் டேவிஸூம் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்ட தண்டர் அணி 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஜேசன் சங்கா - சாம் பில்லிங்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

Advertisement

இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜேசன் சங்கா 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் பில்லிங்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், கிறிஸ் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பிறகு 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களில் சாம் பில்லிங்ஸும் ஆட்டமிழக்க தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. ஸ்டார்ஸ் தரப்பில் பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும், சிடில், உசாமா மிர் விக்கெட்டுகளியும் கைப்பற்றினர். 

அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. இதில் அணியின் தொடக்க வீரர் சாம் ஹார்பர் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில்  மார்கஸ் ஸ்டொய்னிஸ் 22 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 6 ரன்னிலும், ஹில்டன் கார்ட்ரைட் 17 ரன்னிலும், பியூ வெப்ஸ்டர் 20 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 67 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டையும் இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ஜோனதன் மெர்லோ 3 ரன்களுக்கும், உசாமா மிர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த களமிறங்கிய் வீரர்களாலும் இலக்கை எட்ட முடியவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. தண்டர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வெஸ் அகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News