பிபிஎல் 2021: மார்ஷ் அதிரடியில் பெர்த் அபார வெற்றி!

Updated: Wed, Dec 22 2021 21:43 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணியில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 86 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய மெல்போர்ன் அணியில் ஆரோன் ஃபிஞ்ச் - மேடிசன் இணை அபாரமான தொடக்கத்தை வழங்கியது. இதில் இருவரும் அரைசதம் அடித்தனர். 

பின் 67 ரன்னில் மேடிசன் ஆட்டமிழக்க, 68 ரன்னோடு ஃபிஞ்சும் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் சரிவர சோபிக்க தவறினர். 

இதனால் 20 ஓவர்களில் ரெனிகேட்ஸ் அணியால் 185 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை