ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் 11ஆவது சீசன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில் நடப்பு சீசனுக்கான சிட்னி சிக்சர்ஸ் அணியில் இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜேம்ஸ் வின்ஸ் மீண்டும் இணைந்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தியுள்ளார்.

Advertisement

இதன் காரணமாக நடப்பு சீசனிலும் சிட்னி சிக்சர்ஸ் அணி ஜேம்ஸ் வின்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுநாள் வரை 227 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் வின்ஸ் 7144 ரன்களை குவித்துள்ளார். அதில் இரண்டு சதமும், 44 அரைசதங்களும் அடங்கும். 

முன்னதாக நடப்பு சீசனுக்கான சிட்னி சிக்சர்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டாம் கரன், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கார்லஸ் பிராத்வையிட் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News