சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!

Updated: Thu, Mar 20 2025 13:08 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த மார்ச் 9ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதன்படி இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தததன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் பரிசுத்தொகை அறிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள், அணி தேர்வாளர்கள் என அனைவருக்கும் சேர்த்து ரூ.58 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, “தொடர்ச்சியாக ஐசிசி பட்டங்களை வெல்வது சிறப்பு வாய்ந்தது, மேலும் இந்த வெகுமதி உலக அரங்கில் இந்திய அணியின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை அங்கீகரிக்கிறது. இந்த பரிசுத்தொகையானது திரைக்குப் பின்னால் அனைவரும் செய்யும் கடின உழைப்புக்கான அங்கீகாரமாகும். ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் இது எங்கள் இரண்டாவது ஐசிசி கோப்பையாகும், மேலும் இது நம் நாட்டில் உள்ள வலுவான கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை