வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!

Updated: Mon, Oct 31 2022 20:08 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டன்களாக ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பியுள்ளனர்.

நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போன்று ருத்துராஜ், பிரித்வி ஷா ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.

வங்கதேச ஒருநாள் அணியில் கேப்டனாக ரோஹித் சர்மா வழக்கம் போல் தொடர்கிறார். ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாஷ் தயால் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஜடேஜாவும் காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

இதே போன்று வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 14 மற்றும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ரோகித், ராகுல், புஜாரா, கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பண்ட் உடன் கூடுதல் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட்  அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரஜட் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயால்

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சுப்மான் கில், புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கேஎஸ் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை