பார்டர் கவாஸ்கர் கோப்பை: விராட் கோலிக்கு அறிவுரை வழங்கிய இர்ஃபான் பதான்!

Updated: Fri, Feb 03 2023 20:39 IST
‘Be little more aggressive’ - Irfan Pathan’s advice for Virat Kohli to counter Australian spinners (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி.

58.93 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது. எனவே அதற்கு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்த தொடரை இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டும். விராட் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பி சதங்களாக விளாசிவரும் நிலையில், அவர் நேதன் லயன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரையும் சிறப்பாக சமாளித்து ஆடுவது அவசியம். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான நேதன் லயன் இருக்கிறார். எனவே இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஸ்பின் பவுலிங்கை எப்படி ஆடவேண்டும் என்று இர்ஃபான் பதான் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், “விராட் கோலி ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அண்மைக்காலமாக ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறும் விராட் கோலி, இந்த டெஸ்ட் தொடரில் நேதன் லயன் மற்றும் அஷ்டான் அகரை எதிர்கொள்ளவுள்ளார். ஸ்பின்னிற்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடி நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஸ்கோர் செய்யவேண்டும் என்ற உறுதியுடன் கோலி ஆடவேண்டும். அதுதான் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை