லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜேமி ஸ்மித அகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை பொறுப்புடன் விளையாடி மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த ஜோ ருட் 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். 

Advertisement

இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 165 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய பென் டக்கெட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி சாம்பியன்ஸ் தொடரில் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பென் டக்கெட் படைத்துள்ளார். அவருக்கு முன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மார்கஸ் ட்ரெஸ்கோதிக் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோர் சதமடித்திருந்தாலும், அவர்கள் முதல் போட்டியில் சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இப்போட்டியில் பென் டக்கெட் 150 ரன்களைக் க்டந்ததன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார். முன்னதாக, 2004 சாம்பியன்ஸ் கோப்பையில் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நாதன் ஆஸ்டில், மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஆண்டி ஃப்ளவர் ஆகியோர் தலா 145 ரன்களை ஆடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்:

  • 165 - பென் டக்கெட் vs ஆஸ்திரேலியா, 2025*
  • 145* - நாதன் ஆஸ்டில் vs அமெரிக்கா, 2004
  • 145 - ஆண்டி ஃப்ளவர் vs இந்தியா, 2002
  • 141* - சௌரவ் கங்குலி vs தென்னாப்பிரிக்கா, 2000
  • 141 - சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா, 1998
  • 141 - கிரேம் ஸ்மித் vs இங்கிலாந்து, 2009
Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News