Ben Duckett WTC Record: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடரில் புதிய சாதனையை படைத்துள்ளார். 

Advertisement

ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் இந்த அணி நிர்ணயித்துள்ள 371 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது 5ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement

அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதுடன் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 149 ரன்களையும், ஸாக் கிரௌலி 65 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஒல்லி போப், ஹாரி புரூக் ஆகியோர் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனையடுத்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் விக்கெட்டை இழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்பாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இங்கிலாந்து தொடக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதுதவிர்த்து இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இங்கிலாந்து தொடக்க வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 

அதேபோல் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதம் விளாசிய உலகின் 6ஆவது தொடக்க வீரர் எனும் பெருமையையும் பென் டக்கெட் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 1953ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸின் ஜே ஸ்டோல்மேயர், 1989ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸும், 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லரும், 2022ஆம் ஆண்டு இலங்கையின் திமுத் கருணரத்னே மற்றும் வங்கதேசத்தின் ஸகிர் ஹசன் ஆகியோர் இதனைச் செய்துள்ளனர். 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர்.

Advertisement

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News