ஆஸ்திரேலிய விருதுகள் 2022: ஸ்மித், கவாஜா, மூனிக்கு கவுரவம்!

Updated: Tue, Jan 31 2023 11:15 IST
Beth Mooney, Steve Smith Claim Top Honours In 2023 Australian Cricket Awards (Image Source: Google)

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக மெய்நிகர் விழாவாக நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டு சிட்னியில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும், வீராங்கனைகள் அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி ஆகியோரும் முக்கிய விருதுகளை வென்றனர்.

அதன்படி, ஆலன் பார்டர் விருதை ஸ்டீவ் ஸ்மித்து, பெலிண்டா கிராளர்க் விருதை பெத் மூனியும், ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஷேன் வார்ன் விருதை உஸ்மான் கவாஜாவும், சிறந்த ஒருநாள் வீரர் விருதை டேவிட் வார்னரும் கைப்பற்றினர். அதேபோல் இளம் கிரிக்கெட்டருக்கான பிராட்மேன் விருதை லான்ஸ் மோரிஸ் வென்றுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகள்:

  • ஆலன் பார்டர் விருது - ஸ்டீவ் ஸ்மித்
  • பெலிண்டா கிளார்க் விருது - பெத் மூனி
  • ஷேன் வார்ன் விருது - உஸ்மான் கவாஜா
  • கம்மியூனிட்டி இம்பாக்ட் விருது - உஸ்மான் கவாஜா
  • 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் - டேவிட் வார்னர்
  • 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • 2022ஆம் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வீரர் - மைக்கேல் நெசெர்
  • 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை - டாலியா மெக்ராத்
  • 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை - பெத் மூனி
  • 2022ஆம் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வீராங்கனை - அன்னாபெல் சதர்லேண்ட்
  • பிராட்மேன் இளம் கிரிக்கெட்டருக்கான விருது - லான்ஸ் மோரிஸ்
  • பெட்டி வில்சன் இளம் கிரிக்கெட்டர் - கர்ட்னி சிப்பெல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை