கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் மிகச்சிறப்பான பங்களிப்பு காரணமாக 48.4 ஓவர்களில் 5 விட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் குதித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது ஷமி, “இந்த போட்டியில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் நான் தொடர்ச்சியாக பெரிய ஸ்பெல்லை வீசினேன். அணியின் கேப்டன் கேட்டுக்கொண்டதாலும், போட்டியின் சூழ்நிலையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நான் ஆரம்பத்திலேயே நான்கு ஐந்து ஓவர்கள் புதிய பந்தில் வீசியதில் மிகவும் மகிழ்ச்சி.

அதிலும் குறிப்பாக நான் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான மிட்சல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தியதை மிகவும் ரசித்தேன். ஏனெனில் எப்பொழுதுமே ஒரு வேகப்பந்து வீச்சாளராக பேட்ஸ்மேனை அவுட் சைடு எட்ஜ் மூலம் விக்கெட் எடுக்கும் போது அது ஒரு அலாதியான சுகம் தான். இந்த போட்டியில் பந்து ஆரம்பத்தில் நன்றாக ஸ்விங் ஆனதால் ரசித்து பந்து வீசினேன். சரியான லென்த்தில் பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதனாலேயே போட்டியின் துவக்கத்தில் நல்ல வேகத்தில் நல்ல இடங்களில் பந்துவீசினேன்.

எங்களுடைய அணியில் உள்ள மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் எனக்கு நீண்ட காலமாக ஒரு நல்ல பிணைப்பு இருந்து வருவதால் அவர்களுடன் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். அதுவும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இந்த போட்டியில் நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News