ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இந்திய அணியானது ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாடி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் இப்போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஏனெனில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில்லின் வருகையின் காரணமாக, முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் இடம்பிடித்திருந்த தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியதாக தகவல்கள் வெளியானது. குடும்பம் தொடர்பான தனிப்பட்ட காரணமாக கௌதம் கம்பீர் நாடு திரும்புவதாக கூறப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய பிதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான இந்திய அணியுடனும் கௌதம் கம்பீர் பயணிக்கவில்லை. ஆனால் தற்சமயம் நாளைய தினம் கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தற்சமயம் இந்திய அணிக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, சர்ஃப்ராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News