ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் -ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு ஒரே அரைசதத்தை மட்டுமே பதிவுசெய்துள்ளார். இதனால் அவரின் பேட்டிங் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதிலும் குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய ரோஹித் சர்மா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 9 ரனகளை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் காபா டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பண்டிங் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்த வரையில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க் வேண்டும். ஏனெனில் அந்த இடம் தான் அவருக்கு சரியானதாக இருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததை நான் அறிவேன். மேலும் அவர்கள் இருவரும் நன்றாக விளையாடினார்கள். ஆனால் ரோஹித் சர்மா உங்கள் கேப்டன். உங்களின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் அவரும் ஒருவர். அவரது இயல்பான இடத்தில் அவரை மேலே அனுப்ப வேண்டும். அதனால் அவர்கள் இதுகுறித்து யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.