சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

Advertisement

இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்த விக்கெட் கீப்பர் சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்தார். 

Advertisement

அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் பகிர்ந்தார். இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்தார்கள். 

அதன்பிறகு சஹாவை மிரட்டியது பிரபல பத்திரிகையாளர் போரியா மஜும்தார் என்பது தெரியவந்தது. சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைக்கு எழுத்து வடிவம் அளித்தவர், போரியா. 

சஹாவை போரியா மிரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்தது பிசிசிஐ. தான் அனுப்பிய வாட்சப் தகவல்களை இடம்மாற்றி வெளியிட்டதாக சஹா மீது குற்றம் சாட்டினார் போரியா. 

இந்நிலையில் சஹாவை மிரட்டிய காரணத்துக்காகப் பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது பிசிசிஐ.

Advertisement

இந்த 2 ஆண்டுத் தடையினால், இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு சர்வதேச, உள்ளூர் ஆட்டங்களுக்கும் ஊடகராகச் செல்ல போரியாவுக்கு அனுமதி மறுக்கப்படும். 

மேலும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களிடம் அவரால் பேட்டி எடுக்க முடியாது. அதேபோல் பிசிசிஐயுடன் இணைந்துள்ள கிரிக்கெட் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிக்கெட் பகுதிகளில் போரியாவுக்கு அனுமதி மறுக்கப்படும். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News