ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடின் வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 1-0  என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 14) மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - கேப்டன் அலிசா ஹீலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அலிசா ஹீலி 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான போப் லிட்ஃபீல்டும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

அதன் பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பெத் மூனி 12 ரன்களிலும், அனபெல் சதர்லேண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து அசத்திய எல்லிஸ் பெர்ரியும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனைகள் ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத் மற்றும் அலனா கிங் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற, ஆஸ்திரேலிய மகளிர் அணி 44.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், அலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியில் டாமி பியூமண்ட் 3, மையா பௌச்சர் 17, கேப்டன் ஹீதர் நைட் 18, டேனியல் வைட் ரன்கள் ஏதுமின்றி என விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - ஏமி ஜோன்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நாட் ஸ்கைவர் 35 ரன்களிலும், ஏமி ஜோன்ஸ் 47 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News