Australia Test Team: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்ச்சிகான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து அந்த அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளுமே சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 25ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். 

இந்நிலையில் தான் அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டத்தாகவும், அந்த காயத்தில் இருந்து மீள சில காலம் ஆகும் என்பதாலும் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சீன் அபோட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அறிமுகமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் சீன் அபோட் இடம்பிடித்திருந்த நிலையில், அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்சமயம் ஆஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதன் காரணமாக, நிச்சயமாக இந்த முறை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்

Advertisement

Also Read: LIVE Cricket Score

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி: ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன், கெவ்லான் ஆண்டர்சன், கிரெய்க் பிராத்வைட், ஜான் கேம்பல், கேசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாச், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், ஜோஹன் லேன், மிகைல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News