இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement

இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா பெரிய ஏமாற்றம் கொடுத்தார். பும்ரா பொதுவாக எந்த களமாக இருந்தாலும் மிக விரைவில் விக்கெட் எடுத்து கொடுக்கக் கூடியவர். ஆனால், சவுத்தாம்ப்டன் பிட்ச் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த போதிலும், சரியான லெந்தில் பந்துவீசுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். 

Advertisement

அதிலும் 5வது நாள் ஆட்டத்திலும் முதலில் சில பந்துகளை மிக ஷார்ட் லெந்த்தில் அவர் வீசி சொதப்பினார். பின்னர் அதனை சரிசெய்துகொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில், பும்ராவை மீண்டும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விமர்சனங்களுக்கு இந்த முறை அவர் ஜெர்ஸியை தவறாக அணிந்து வந்தது தான் காரணம். 

நேற்றைய போட்டி தொடங்கும் போது பும்ரா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து வராமல், இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வந்து விளையாடினார். மேலும், அதே ஜெர்ஸியை அணிந்துக்கொண்டு ஒரு ஓவரும் வீசினார். பின்னர் ரசிகர்கள் பார்த்து கண்டுபிடித்தவுடன் போட்டிக்கு இடையே ஓய்வறைக்கு சென்று தனது ஜெர்ஸியை மாற்றி வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒவ்வொரு அணியின் டெஸ்ட் ஜெர்ஸியிலும் நாடுகளின் பெயர் ஓரத்தில் அச்சிடப்பட்டு, ஸ்பான்சர்களின் பெயர் நடுவில் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், வீரர்களின் ஜெர்ஸியின் மையப் பகுதியில் தான் நாடுகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஸ்பான்சர்களின் பெயர்கள் ஜெர்ஸியின் வேறு ஏதாவது பகுதியில் தான் இடம்பெற்றிருக்க வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடப்பதால் பும்ரா தவறுதலாக வழக்கமான ஜெர்ஸியை அணிந்து வந்து விளையாடிவிட்டார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News