PAK vs ENG: இங்கிலாந்து அணிக்கு திரும்பும் நட்சத்திரம்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

Updated: Tue, Sep 27 2022 19:07 IST
Buttler can return "maybe in the last game or two" against Pakistan (Image Source: Google)

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதுவரை  4 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் தொடர் 2-2 என சமனில் உள்ளது. 

இந்நிலையில் இரு ஆணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டி20 போட்டி நாளை லாகூரிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயமடைந்து, தொடரின் முதல் சில போட்டிகளிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மொயீன் அலி இங்கிலாந்து அணியை வழிநடத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஜோஸ் பட்லர், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி பேட்ஸ்மேனும் கேப்டனுமான ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணியின் பேலன்ஸ் வலுவடையும். தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டிகளில் பட்லர் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்க்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை