பார்டர் கவாஸ்கர் கோப்பை: கேமரூன் கிரீன் விலகல்!

Updated: Fri, Feb 03 2023 22:46 IST
Image Source: Google

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

கேப்டனாக வழக்கம்போல் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகளில், முதல் இரண்டு டெஸ்ட்களில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இத்தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். கடந்த இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதால், இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் எனக் கருதப்படுகிறது.

இத்தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெறும் பட்சத்தில், மூன்றுவிதமான தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும். இதனால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விரல் வலி காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவான விஷயம்தான்.

கேமரூன் கிரீன் மொத்தம் 18 டெஸ்ட்களில் 6 அரை சதங்கள் உட்பட 806 ரன்களை குவித்துள்ளார். மேலும், 23 விக்கெட்களையும் சாய்த்து முரட்டு பார்மில் இருக்கிறார். இவர் இடம்பெற்றால் ஒரு பௌலரை குறைத்துவிட்டு, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்திருக்க முடியும். இவர் இல்லாததால், தற்போது ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவரால், இந்திய மண்ணில் அபாரமாக விளையாட முடியும் என்ற காரணத்தினால், இவரை வாங்க ஐபிஎலில் பல அணிகள் கோடிகளை கொட்டி வாங்க முயன்றது. இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை