Advertisement

Canada vs Ireland Dream11 Prediction Match 13, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து அணியை எதிர்த்து கனடா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தங்களது வெற்றிக்கணக்கைத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

CAN vs IRE: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கனடா vs அயர்லாந்து
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

CAN vs IRE: Pitch Report

Advertisement

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையற்ற பவுன்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இது பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிட்சாக இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் நீளமானது என்பதால் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

CAN vs IRE: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 04
  • கனடா - 02
  • அயர்லாந்து - 02
  • முடிவில்லை - 00

CAN vs IRELive Streaming Details

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம்.

Canada vs Ireland Predicted Teams

கனடா: ஸ்ரேயாஸ் மொவ்வா, ஆரோன் ஜான்சன், பிரகத் சிங், நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டன், சாத் பின் ஜாபர் (கேப்டன்), தில்ப்ரீத் சிங், தில்லன் ஹெய்லிகர், ஜெர்மி கார்டன், நிகில் தத்தா, கலீம் சனா.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் வைட்

CAN vs IRE Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: லோர்கன் டக்கர், ஷ்ரேயாஸ் மொவ்வா
  • பேட்டர்ஸ்: நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டன்
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்க் அதிர் (கேப்டன்), தில்லன் ஹெய்லிகர் (துணை கேப்டன்), கெராத் டெலானி, சாத் பின் ஜாபர், கர்டிஸ் கேம்பர்
  • பந்துவீச்சாளர்கள்: கலீம் சனா, பெஞ்சமின் ஒயிட்
Advertisement

Canada vs Ireland Fantasy Tips, CAN vs IRE Dream11 Team, Canada vs Ireland: Predicted XIs, CAN vs IRE: Pitch Report, CAN vs IRE Live Streaming Details, CAN vs IRE: Head-to-Head, CAN vs IRE: Dream11 Prediction match 13 ICC T20 World Cup 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News