இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்காளைச் சேர்க்க தவறினர். 

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யும் போது காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இப்போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்ய மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் செய்ய வராத காரணத்தால் மார்க் சாப்மேன் அவருக்கு மாற்றாக ஃபீல்டிங் செய்து வருகிறார். இருப்பினும் கேன் வில்லியம்சன் காயம் குறித்த வேறு எந்த தகவலையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. தற்போது வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

New Zealand Playing XI: வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.

Advertisement

India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News