சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஐசிசி சிறந்த லெவனில் ஐந்து இந்தியர்களுக்கு இடம்!

Updated: Mon, Mar 10 2025 20:46 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (மார்ச் 9) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த அணியில் ஐந்து இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்த அணியின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர்த்து மூன்றாம் வரிசையில் விராட் கோலியும், நான்காம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், 5ஆம் இடத்தில் கேஎல் ராகுலும் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல் ரவுண்டர்களாக நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ், ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஆகியோருடன் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னரும் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியின் கேப்டனாகவும் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர்த்து அணியின் பந்துவீச்சாளர்களாக நியூசிலாந்தின் மேட் ஹென்றி, இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கைத்துள்ளது. இதுதவிர்த்து 12ஆவது வீரராக இந்திய அணியின் அக்ஸ்ர் படேலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த அணியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த எந்த வீரர்களுக்கும் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 இன் சிறந்த லெவன்:

  1. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)
  2. இப்ராஹிம் ஸ்த்ரான் (ஆப்கானிஸ்தான்)
  3. விராட் கோலி (இந்தியா)
  4. ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா)
  5. கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்) (இந்தியா)
  6. கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து)
  7. அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்)
  8. மிட்செல் சான்ட்னர் (கேப்டன்) (நியூசிலாந்து)
  9. முகமது ஷமி (இந்தியா)
  10. மேட் ஹென்றி (நியூசிலாந்து)
  11. வருண் சக்ரவர்த்தி (இந்தியா)
  12. அக்சர் படேல் (12ஆவது வீரர்) (இந்தியா)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை