பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற நான்காவது டி20 போட்டி ஏறத்தாழ முதல் இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயில் மழை காரணமாக ஆட்டம் பாதிலேயே தடைப்பட்டு, பின்னர் ரத்துசெய்யப்பட்டது. இதனால் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியிலுள்ள ராவல்பிண்டி  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் கேப்டன் பாபர் ஆசாம் 19 ரன்களில் அட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமான், சைம் அயூப் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் இறுதிவரை களத்தில் இருந்து 7 பவுண்டர், 4 சிக்சர்கள் என 98 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அவர் சதமடிப்பார் என எதிர்பார்பார்க்கப்பட்ட நிலையில் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

அவருக்கு துணையாக விளையாடிய இஃப்திகார் அகமது 36 ரன்களையும், இமாத் வாசிம் 31 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்து. நியூசிலாந்து தரப்பில் பிளையர் டிக்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அணியின் கேப்டன் டாம் லேதம் முதல் பந்திலும், வில் யங் 4 ரன்களிலும் என அடுத்தடுத்த் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சாத் பௌஸும் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டெரில் மிட்செல் - மார்க் சாப்மேன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஒரு கட்டத்தில் மிட்செல் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷமும் அதிரடியாக விளையாடினார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க் சாப்மேன் 54 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 19. 2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-2 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்தது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 104 ரன்களையும், ஜிம்மி நீஷம் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களையும் சேர்த்தனர். இதன் காரணமாக மார்க் சாப்மேனுக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News