ஜூன் மாதம் கிரிக்கெட் வீரர்களின் திருமண மாதம் என்று சொல்லும் அளவுக்கு தற்போது வரை மூன்று இளம் வீரர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். ஜூன் மாதம் 3ஆம் தேதி சிஎஸ்கே அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisement

தனது காதலியும், மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான உத்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ருதுராஜ் கெய்க்வாட். தமிழ்நாடு பாரம்பரிய ஆடையான வேஷ்டி சட்டை அணிந்து ருதுராஜின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த அவர் சென்னை மக்களுக்காக அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜூன் 8ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த இரண்டு ஐபிஎல் இளம் வீரர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது பள்ளி தோழி நாபா கட்டம்வார் என்பவரை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் மும்பையில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

திருமண நிகழ்வின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த தேஷ்பாண்டே, "எனது பள்ளி கால க்ரஷாக இருந்தவர் வருங்கால மனைவியாக புரொமோட் ஆகியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார். தேஷ்பாண்டாவுக்கு, சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் சக வீரரான ருதுராஜ் கெய்க்வாட் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News