சேலம்: ஆஷிக் மற்றும் ஜெகதீசன் அகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

Advertisement

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன்ஸ் அணி ஹாரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஹரி நிஷாந்த் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ராஜகோபால், கவின், விவேக் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர்.

Advertisement

அவர்களைத்தொடர்ந்து 47 ரன்களில் அபிஷேக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் சன்னி சந்து 30 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது 28 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரேம் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிஷேக், சிலம்பரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கில்லீஸ் அணிக்கும் ஆசிக் மற்றும் மொஹித் ஹரிஹரன் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 73 ரன்களைச் சேர்த்த நிலையில் மோஹிட் ஹரிஹரன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜெகதீசனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த அணியின் வெற்றியும் எளிதானது. மேற்கொண்டு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆசிக் மற்றும் ஜெகதீசன் இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

Also Read: LIVE Cricket Score

பின் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களிலும், ஜெகதீசன் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து விஜய் ஷங்கரும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தலும் கேப்டன் அபாரஜித் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News