இலங்கை மகளிர் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்றது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னேரி டெர்க்சன் சதமடித்ததுடன் 104 ரன்களையும், சோலே ட்ரையான் 74 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தேவாமி விஹங்கா 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 52 ரன்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 43 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால், இலங்கை மகளிர் அணி 42.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சோலே ட்ரையான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோலே ட்ரையான் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். மேலும் பேட்டிங்கிலும் அவர் 74 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ததன் மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

அந்தவகையில் இப்போட்டியில் இலங்கை இன்னிங்ஸின் 42ஆவது ஓவரை சோலே ட்ரையான் வீசிய நிலையில், அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே தேவாமி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதரா உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நீகெர்க்கின் டேனும், கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மசபடா கிளாஸும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளனர். மேற்கொண்டு உலகளவில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 13அவது வீராங்கனை எனும் பெருமையையும் சோலே ட்ரையான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News