இந்திய கிரிக்கெட் அணிக்காக 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியவர் கவாஸ்கர். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை எடுத்துள்ளார். இதில் 34 சதம் மற்றும் 45 அரை சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 51.12. 

Advertisement

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலில் 10,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தார். அதன் பிறகு இதுவரையில் இந்த மைல்கல்லை 14 வீரர்கள் எட்டினர். அதில் தற்போது இணைந்துள்ளவர் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.

Advertisement

இந்நிலையில், 10000 ரன்கள் கடந்த தருணத்தில் தனது எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை சுனில் கவாஸ்கர் பகிர்ந்துள்ளார் . 

இதுகுறித்து பேசிய அவர்"அதனை ஒரு மாயம் போல நான் உணர்ந்தேன். ஏனெனில் அதற்கு முன்னர் அந்த ஐந்து இலக்க எண்களை யாருமே எட்டியது கிடையாது. அதனால் அது ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதை போல இருந்தது. முதல் முறை என்பதால் அப்படி ஒரு உணர்வு. 

அந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அணியின் கேப்டன் கபில் தேவ். அணியினருடன் இணைந்து அதை நாங்கள் கொண்டாடினோம்" என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.

அவருக்கு பிறகு சச்சின் (15,921 ரன்கள்) மற்றும் டிராவிட் (13,288 ரன்கள்) என இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News