ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!

Updated: Mon, Sep 16 2024 19:39 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற இருந்தது. 

ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இந்த டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். 

மேலும் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரன ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலி சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அறிமுக வீரரான மஹ்லி பியர்ட்மேன் அணியின் கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏனெனில் ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ரைலீ மெரிடித், ஸ்பென்ஸர் ஜான்சன் உள்ளிட்டோர் காயமடைந்ததன் காரணமாக இந்த முடிவானது எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஒருநாள் அணியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அவருடன் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் அங்கம் வகிக்கிறார். இவர்களுடன் 

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்ச் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, கூப்பர் கன்னொலி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை