சிபிஎல் 2021: ஃபிளட்சரின் அதிரடி ஆட்டம் வீண்; தோல்விக்கு பதிலடி கொடுத்தது நைட் ரைடர்ஸ்!

Updated: Wed, Sep 01 2021 09:12 IST
Image Source: Google

சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்களையும், டிம் செய்ஃபெர்ட் 37 ரன்களையும் சேர்த்தனர். கிங்ஸ் அணி தரப்பில் கேசரிக் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய கிங்ஸ் அணியில் ரகீம் கார்ன்வால் 8, ஃபாஃப் டூ பிளெசிஸ் 14, ரோஸ்டன் சேஸ் 0, மார்க் டியால் 14, டிம் டேவிட் 0 என எடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் மறுமுனையிலிருந்து ஆண்ட்ரே ஃபிளட்சர் ஒற்றை ஆளாய் போராடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயர்த்தார். இதில் அவர் அரைசதத்தயும் கடந்தார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் அணியால் 131 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபிளட்சர் 81 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம்  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி, முந்தைய தோல்விக்கு பழிதீர்த்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை