சிபிஎல் 2021: உதானா, பொல்லார்ட் அசத்தல்; முதல் வெற்றியை பெற்ற நைட் ரைடர்ஸ்!

Updated: Sat, Aug 28 2021 11:27 IST
Image Source: Google

சிபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கிளென் பிலீப்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின்னர் வந்த ஆசம் கானும் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்த்தார். ஆனால் அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் 19.2 ஓவர்களிலேயே பார்போடாஸ் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் இசுரு உதானா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், கேப்டன் பொல்லார்ட் தனி ஒருவனாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் 30 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 58 ரன்களையும் அவர் சேர்த்தார்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 16.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இசுரு உதானா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை