12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி பந்துவீசை தேர்வு செய்தது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணிக்கு ரியான் ரெய்ஃபெர் - அசாம் கான் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரெய்ஃபெர் 5 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய குடகேஷ் மோட்டி 8 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் அணியின் தொடக்க வீரர் அசாம் கான் 29 ரன்களிலும், அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்த நிலையில், கயானா அணி 85 ரன்களுகே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. 

Advertisement

பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் மொயீன் அலி அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு இப்போட்டியிலும் தொடக்கம் என்பது சரியாக அமையவில்லை. 

அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 3 ரன்களுக்கும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கொஃபி ஜேம்ஸ் ஓரளவு தக்குப்பிடித்து 27 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் ஹசன் கான் 10 ரன்களையும், இமாத் வசிம் 7 ரன்களையும், ஹாமில்டன் 12 ரன்களையும், கேப்டன் கிறிஸ் கிரீன் 17 ரன்களையும், ஃபேபியன் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும், ஜோஷுவா ஜேம்ஸ் 15 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கயானா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஆல் ரவுண்டராக கலக்கிய மொயீன் அலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News