விறுவிறுப்பான காட்டத்தை எட்டி இருக்கும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் அட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 25 ரன்கள் எடுத்த நிலையில் சார்லஸும், 14 ரன்கள் எடுத்த நிலையில் டூ பிளெசிஸும் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய அகீம் அகஸ்டே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும், டிம் செய்ஃபெர்ட் 13 ரன்களுக்கும், பனுகா ராஜபக்சா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். அதன்பின் அகஸ்டேவுடன் இணைந்த டேவிட் வைஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்கீம் அக்ஸ்டே 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வாய்ப்பினை தவறவிட்டார். 

Advertisement

அதேசமயம், மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் கேப்டன் கிறிஸ் கிரீன் 4 விக்கெட்டுகளையும், ஷமார் ஸ்பிரிங்கர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 10 ரன்களுக்கும், கோஃபி ஜேம்ஸ் 11 ரன்களிலும் என ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சாம் பில்லிங்ஸ் 5 ரன்களுக்கும், ஜஹ்மார் ஹாமில்டன், இமாத் வசீம் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஃபால்கன்ஸ் அணி 28 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் இணைந்த ஷமார் ஸ்பிரிங்கர் - கேப்டன் கிறிஸ் கிரீன் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இதில் ஷமார் ஸ்பிரிங்கர் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபேபியன் ஆலனும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். தேசமயம் இப்போட்டியில் வெற்றிக்காக போராடிய கிறிஸ் கிரீன் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் பிரிமஸ் 17 ரன்களைச் சேர்த்த நிலையிலும், ஃபால்கன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News